உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய, மாநில ஓய்வூதியர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புருஷோத்தமன் தலைமை தாங்கினார். ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மனோகரன், துணை தலைவர்கள் மேகநாதன், நடராஜன், மாவட்ட தலைவர்கள் சிவராமன், சாந்தகுமார், சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினர். 2025 நிதி மசோதாவில் 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்கனவே உள்ள ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த மறுத்து, ஓய்வூதியர்களை பாகுபடுத்தும் நிதி மசோதா திருத்த பிரிவுகளை வாபஸ் பெற வேண்டும். 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஓய்வூதியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டும் நடைமுறைகளை கைவிட வேண்டி உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் பழனி, மதியழகன், மாவட்டத் தலைவர் கண்ணுசாமி, அஞ்சலக ஓய்வூதியர் சங்கம் சேகர், தேசிய செயலாளர் ஸ்ரீதர், உதவி பொதுச் செயலாளர் மருதவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட தலைவர் காசிநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ