உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பென்ஷனர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

பென்ஷனர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

கடலுார்; கடலுாரில் அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் ராமசாமி துவக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் பக்கிரி, விவேகானந்தன், ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் மருதவாணன், மாவட்ட வங்கி ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ரமணி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க தலைவர் காசிநாதன், ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர்கள் சங்க தலைவர் பக்தவச்சலம் வாழ்த்துரை வழங்கினர். இதில், தேர்தல் வாக்குறுதியான 70 வயது நிறைவடைந்த பென்ஷனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும். கடலுார் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற துாய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப்., நிலுவை வட்டித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, நிர்வாகிகள் ரத்தினராமசாமி, முல்லைநாதன், அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பிரதிநிதி ராமலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை