மணிமுக்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பு மக்கள் மகிழ்ச்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி அணை 42 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, 200 கனஅடி நீர் நேற்றுமுன்தினம் மணிமுக்தாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து, செல்பி எடுத்துச் செல்கின்றனர்.