மேலும் செய்திகள்
ஆகாய தாமரை செடி: குளத்தில் துர்நாற்றம்
02-Aug-2025
புவனகிரி : புவனகிரி பேரூராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட பெரிய தேவாங் கர் தெரு, சவுராஷ்ட்ரா தெரு, பாளையக்காரர் தெரு, தாமரைக்குளம் தெரு, சின்னப்ப முதலி தெரு உள்ளிட்ட இடங்களில் தார் சாலைகளில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே, பழுதான சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Aug-2025