கலங்கலான குடிநீர் மக்கள் கடும் அவதி
நெல்லிக்குப்பம், :நெல்லிக்குப்பத்தில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் காலை, மாலை 2 வேளைகளிலும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து சப்ளை செய்யப்படும் குடிநீர் கடந்த 4 நாட்களாக வஜீர்கான் தெரு, ராஜிவ்காந்தி நகர் பகுதிகளில் கலங்கலாக வருவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்டோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.