உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெலிங்டன் சாலை பஞ்சர் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வெலிங்டன் சாலை பஞ்சர் சீரமைக்க மக்கள் கோரிக்கை

திட்டக்குடி, : ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற வெலிங்டன் நீர்த்தேக்க சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்க சாலையை பயன்படுத்தி திட்டக்குடி, கீழ்ச்செருவாய், தி.இளமங்கலம், இடைச்செருவாய், ஆ.பாளையம், மேல் ஐவனுார், கீழ் ஐவனுார், மேல்ஆதனுார், கீழ்ஆதனுார், ஆவட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு திட்டக்குடி, விருத்தாசலம், மங்களூர், தொழுதுார் உட்பட பல பகுதிகளுக்கு எளிதாக சென்று வருகின்றனர்.பராமரிப்பின்றி உள்ள இந்த சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, போக்குவரத்திற்கு லாயக்கற்ற வெலிங்டன் நீர்த்தேக்க சாலையை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை