உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையால் மக்கள் தவிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையால் மக்கள் தவிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலுார்: கடலுார் மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனை முனைய கருவி சரியாக இயங்காததால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகிறது.மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் என, 10 தாலுகா உள்ளன. மாவட்டம் முழுதும் 1,416 ரேஷன் கடைகள் உள்ளன. 7 லட்சத்து 89 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கார்டு ஸ்கேன் செய்தல், பயோ மெட்ரிக் பதிவு, ரசீது வழங்கும் இயந்திரம், டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய விற்பனை முனைய கருவி ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில், மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளி்ல் கடந்த ஒரு மாதத்தி்ற்கு மேலாக சர்வர் பிரச்னை காரணமாக விற்பனை முனைய கருவி சரியாக இயங்காததால் பொருட்கள் வினியோகம் தடைபடுகிறது.சர்வர் பிரச்னை விரைவில் சரியாகும் என கருதி ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.நீண்ட நேரம் காத்திருந்து சர்வர் பிரச்னை சரியானதும் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். சில நேரங்களில் கடைக்கு வந்து பொருட்கள் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவல நிலையும் உள்ளது. சில இடங்களில் விற்பனையாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வழக்கம் போல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் ரேஷன் கடைகளில் குவி்ந்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில் சர்வர் பிரச்னையை சரி செய்து விரைவாக பொருட்கள் வழங்க மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ரேஷன் கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 18, 2024 19:50

அவிங்க என் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க? அங்கே உக்காந்திருக்கும் தத்திகளுக்கு சர்வர்களை சீராக இயக்குவது பற்றி தெரியாது. இல்லே துட்டு வாங்கிட்டு பாடாவதி சர்வர்களை வாங்கி குவிச்சிருப்பாங்க. லஞ்சம் வாங்க மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை