உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை சேதம் மக்கள் அவதி

சாலை சேதம் மக்கள் அவதி

புதுச்சத்திரம்: பெத்தாங்குப்பம் - மாந்தோப்பு சாலையை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சத்திரம் அடுத்த பெத்தாங்குப்பம்-மாந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள், தினசரி அன்றாட தேவைகளுக்காக பயன் படுத்தி வருகின்றனர். இந்த சாலை பழுதடைந்து, குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து, விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, பெத்தாங்குப்பம்- மாந்தோப்பு சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ