மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
கடலுார்: மத்திய அரசு நடத்தவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தில் 21 வகை மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்வதற்கு பதிலாக வெறும் 9 பிரிவினரை மட்டுமே பதிவு செய்ய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் 12 வகை மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவாகாமல் விடுபட்டு, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற முடியாது. எனவே 21 வகை மாற்றுத் திறனாளிகளையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்து அரசு நலத்திட்டங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாடு முழுவதும் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கடலுாரில் நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நடேசன் தலைமை தாங்கிானர். மாநிலக்குழு ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆளவந்தார், மாவட்ட துணைத் தலைவர் ராசையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.