உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீண்டும் வாரச்சந்தை மக்கள் கோரிக்கை

மீண்டும் வாரச்சந்தை மக்கள் கோரிக்கை

புவனகிரி ராகவேந்திரர் கோவில் அருகில் வாரந்தோறும் வாரச்சந்தை இயங்கியது. இதனால் சுற்றுபகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றனர். புவனகிரி பகுதியில் தோட்டப்பயிர்கள் உற்பத்தி செய்த விவசாயிகள் வாரம் தோறும் நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்ததால், இடைத்தரகர்கள் இல்லாமல் குறிப்பிட்ட வருவாய் ஈட்டினர்.பேரூராட்சி நிர்வாகத்திற்கும் போதிய வருமானம் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன் வாரசந்தையை திடீரென தற்காலிகமாக நிறுத்தினர். அதன்பிற்கு துவங்கவில்லை. இதனால் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வாரத்தில் ஒரு நாள் வடலுார் மற்றும் பரங்கிப்பேட்டையில் நடக்கும் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால், கூடுதல் செலவு, நேரம் விரயமாவதால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, புவனகிரியில் மீண்டும் வாரச்சந்தை இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி