உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மிளகு கொடி வளர்ப்பு மாணவர்கள் பார்வை

மிளகு கொடி வளர்ப்பு மாணவர்கள் பார்வை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே இயற்கை விவசாயி விளைவித்த மிளகு கொடிகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 73; ஓய்வு பெற்ற ஆசிரியர். இயற்கை விவசாயியான இவர், தனது வயலில் கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிட்டு வருகிறார். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் அதிகளவு விளையும் மிளகு கொடிகளை இங்கும் பயிரிட முடியும் என்ற நோக்கத்தில் தனது வீட்டுத்தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு நட்டு வைத்தார். தற்போது, கொடிகளில் மிளகு காயத்துள்ளதை வெய்யலுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மிளகு கொடி வளர்ப்பு குறித்து விவசாயி ராமதாஸ் மாணவர்களுக்கு விளக்கினர். தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், பட்டதாரி ஆசிரியர் மகேஷ், ஆசிரியை வெண்ணிலா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !