மேலும் செய்திகள்
ஆராதனை விழா
16-Feb-2026
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டுதோறும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் மாசி மகத்தையொட்டி, எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வரவேற்பளித்து அழைத்து வந்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் சமேதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை உபயதாரர் கோவிந்தசாமி குடி அடியார்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை கவுரவ தலைவர் சாமிநாதன், மற்றும் குழுவினர் கயிலை ராமநாதன் , டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல், ரமேஷ் ஆச்சாரியர், ஆன்மிக சேவையாளர் மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
16-Feb-2026