உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ட்ரோன் மூலம் பூச்சி மருந்து: விவசாயிகள் ஆர்வம்

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து: விவசாயிகள் ஆர்வம்

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் பகுதியில் சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டுள்ள வயல்களில், ட்ரோன் மூலம் விவசாயிகள் பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர்.புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளான வேளங்கிபட்டு, மணிக்கொள்ளை, பால்வாத்துண்ணான், பூவாலை, அலமேலுமங்காபுரம், தச்சக்காடு, வயலாமூர் உள்ளிட்ட பகுதிகளில், பின்பட்ட சம்பா பருவ சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது நெல் பயிர்களில் புகையான், இலை கருகள் நோய் உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் மேனுவல் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர் மூலம் பூச்சி மருந்து தெளித்து வந்த விவசாயிகள், தற்போது ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் மருந்து செலவு மற்றும் நேரம் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை