மேலும் செய்திகள்
அலுவலர் இல்லாத பேரூராட்சி
01-Nov-2024
கடலுார்: செயல் அலுவலர் அலுவலகம் மீண்டும் கோவிலில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் அடுத்த காராமணிக்குப்பம், குணமங்கலம் கிராம மக்கள் அளித்துள்ள மனு:எங்கள் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் செயல் அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.தற்போது, இந்த அலுவலகம் இங்கு செயல்படுவதில்லை. இக்கோவில் பெயரில் தான் செயல் அலுவலருக்கான பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக செயல் அலுவலர் அடிப்படை வசதியில்லை எனக்கூறி அலுவலகத்தை நெல்லிக்குப்பத்திற்கு மாற்றி விட்டனர்.இதனால், கோவில் நிர்வாகம் சரிவர செயல்படுவதில்லை. தற்போது குடமுழுக்கு திருப்பணி நடைபெற்று வருகிறது. அதில் பல பிரச்னைகள் நடக்கிறது. செயல் அலுவலர் அலுவலகம் இயங்காததால் நாங்கள் சிறு விஷயத்திற்கு கூட செயல் அலுவலரை தேடி அலைய வேண்டியுள்ளது.எனவே, செயல் அலுவலர் அலுவலகத்தை மீண்டும் கோவிலில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
01-Nov-2024