உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடியிருப்போர் நலச் சங்கம் கமிஷனரிடம் மனு

குடியிருப்போர் நலச் சங்கம் கமிஷனரிடம் மனு

கடலுார்,: சமுதாய கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பம் ஓம் சக்தி நகர், இளம்வழுதி நகர், தனலட்சுமி நகர், அங்காளம்மன் நகர், விநாயகர் அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு;இந்த நகர்களில் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் 2,000 பேர் வசிக்கிறோம். கடந்த 2021 முதல் 2022 வரை பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக எங்கள் உடமைகள் அழிந்து, சில வீடுகள் இடிந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறோம். இயற்கை பேரிடரிலிருந்து பாதுகாத்து கொள்ள சமுதாய கூடம், கழிவுநீர் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும். விடுபட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், வீட்டுவரி உயர்வை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !