உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 6 ஏக்கர் குளத்தை காணோம் மேப்புடன் தாசில்தாரிடம் மனு

6 ஏக்கர் குளத்தை காணோம் மேப்புடன் தாசில்தாரிடம் மனு

விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே 6 ஏக்கர் குளத்தை காணவில்லை என வரைபடத்துடன் தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் தெற்கு ஒன்றிய வி.சி., அமைப்பாளர் விஜயகுமார் தலைமையில் மண்டல துணை தாசில்தார் செல்வமணியிடம் கொடுத்துள்ள மனு:விருத்தாசலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராம சாலையோரம் புல எண். 43ல் 6 ஏக்கர் பரப்பளவில் குடையான்குளம் இருந்தது. இதனை பொது மக்கள், கால்நடைகள் பயன்படுத்தி வந்தன. மேலும் விவசாய பயன்பாட்டிற்கும் இதிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. நாளடைவில் குளத்தின் கரைகள், நீர்வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் 6 ஏக்கர் குளம் காணாமல் போய்விட்டது. எனவே, மாயமான குளத்தை மீட்டு, அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பகுஜன் சமாஜ்., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன், ராஜேந்திரபட்டிணம் ஊராட்சித் தலைவர் சடையன்பெயரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி