உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணையாற்றின் கரைகள் சீரமைக்க கலெக்டருக்கு மனு

பெண்ணையாற்றின் கரைகள் சீரமைக்க கலெக்டருக்கு மனு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணையாற்றின் கரைகளை பருவமழை துவங்குவதற்குள் சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கலெக்டருக்கு, நெல்லிக்குப்பம் அடுத்த பகண்டை கிராம மக்கள் அனுப்பிய மனு: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாத்தனுார் அணையில் அளவுக்கு அதிகமாக திறக்கப்பட்ட தண்ணீர் பெண்ணையாற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பகண்டை பெண்ணையாற்றில் உள்ள சொர்ணாவூர் தடுப்பணை வெள்ளத்தால் பாதியளவு அடித்து செல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதை சரி செய்யவில்லை.பகண்டை மற்றும் மேல்பட்டாம்பாக்கம் கஸ்டம்ஸ் சாலையில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. கரை சேதமான இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனர்.வடகிழக்கு பருவமழையின் போது, ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, சேதமான கரைகளையும், தடுப்பணையையும் நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ