உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம் 

 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம் 

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சியில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டு, பேரூராட்சி உரிமம் பெற வேண்டும் என செயல் அலுவலர் சண்முக சுந்தரி தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு; சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் பேரில், பேரூராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மருத்துவமனை, கல்வி நிறுவனம், பஸ் ஸ்டாண்டு, கோவில், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த, அந்ததந்த பகுதியில் ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை