உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முருகன்குடியில் பனை விதை நடவு

முருகன்குடியில் பனை விதை நடவு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் செந்தமிழ் மரபு வழி வேளாண் மையம் சார்பில் பனை விதை நடவு பணி நடந்தது. முருகன்குடி நண்பர்கள் நடைபயிற்சி குழு பொறுப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ரத்தினபுகழேந்தி முன்னிலை வகித்து, பனை விதையை நடும் பணியை துவக்கி வைத்தார். திருவள்ளுவர் தமிழர் மன்றம், செந்தமிழ் மரபு வழி வேளாண் மையம், வள்ளலார் பணியகம், விகடகவி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நிர்வாகிகள், கிராம இளைஞர்கள் உட்பட பலர் பங்கேற்று முருகன்குடி வெள்ளாற்றங் கரையில் பனை விதை நடவு பணியில் ஈடுபட்டனர். வேளாண் கூட்டியக்க இணை ஒருங்கிணைப்பாளர் முருகன் ஒருங்கிணைப்பு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !