பூலோகநாதர கோவிலில் உழவார பணி
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் உள்ள பழமையான பூலோகநாதர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது.சிதம்பரம் திருத்தில்லை உழவார திருக்கூட்டத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், உழவாரப் பணியை செய்தனர்.கோவில் வளாகம் முழுவதும் வளர்ந்திருந்த புல், பூண்டுகளை அகற்றினர். கோவில் வளாகத்தில் இருந்த சுவாமி சிலைகளை எண்ணெய் கொண்டு துடைத்து சுத்தம் செய்தனர். கோவில் சார்பில் அனைவருக்கும் குமார், ஹரிபிரபு குருக்கள் பிரசாதம் வழங்கினர்.