பா.ம.க., ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பா.ம.க., மேற்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், முருகன், மாவட்ட துணை தலைவர் துரை, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ரவி, தொகுதி அமைப்பு செயலாளர் குழந்தைவேல், நிர்வாகிகள் சரவணன், மணிகண்டன், சேதுபதி, மணி உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 29ம் தேதி வடலுாரில் நடக் கும் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசை, மேற்கு மாவட்டத்தில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சென்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.