உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., உட்கட்சி பிரச்னை; கோர்ட்டை அணுக அன்புமணி திட்டம்

பா.ம.க., உட்கட்சி பிரச்னை; கோர்ட்டை அணுக அன்புமணி திட்டம்

நெய்வேலி: பா.ம.க., வில் நிலவும் பிரச்னைகளை எதிர்கொள்ள கோர்ட்டை நாட அன்புமணி திட்டமிட்டுள்ளார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு உள்ளது. இதன் எதிரொலியாக, பா.ம.க.,வில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக, பா.ம.க.,வின் தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக, புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் அறிவித்து வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அன்புமணி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தனக்கு மட்டும்தான் நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் அதிகாரம் உள்ளது. எனவே, நிறுவனர் நியமித்த நிர்வாகிகளின் நியமனம் செல்லாது; ஏற்கனவே பொறுப்பில் இருந்து வரும் மாவட்ட செயலாளர்கள் தான் கட்சி பணியில் தொடர்வார்கள் என அறிவித்து வருகிறார். இதனால் அடிமட்ட தொண்டர்களிடையே அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், ராமதாஸ் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். கட்சி நடவடிக்கைகளில், பா.ம.க., ராமதாஸ் ஈடுபடுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டை அணுக அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை