மேலும் செய்திகள்
வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
24-Jul-2025
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே போக்சோ சட்டத்தில் தண்டனை விதிக்கப்பட்டு, ஜாமினில் வெளியே வந்த கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். க டலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாசிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 40. இவர் கடந்த 2015ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 2024ம் ஆண்டு ஏழுமலைக்கு, 7 ஆண்டு சிறை தண் டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏழுமலை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து, கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். கடலுார் மகிளா கோர்ட்டில், கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில், கடன் பிரச் னை அதிகமானதால், இவரது மனைவி அருள்மணிக்கும், இவருக்கும் இடையே நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த ஏழுமலை நேற்று முன்தினம் இரவு அருகில் இருந்த முந்திரி தோப்பில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார்கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, அருள்மணி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Jul-2025