உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது போக்சோ  

சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது போக்சோ  

பண்ருட்டி : பண்ருட்டி அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்தனர். பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் மகன் சிவபெருமாள்,20; கூலித் தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை ஏமாற்றிய சிவபெருமாள் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர், உறவினர் உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேப் போன்று, பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் நந்தா,19;.என்பவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் மீதும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை