உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு

குள்ளஞ்சாவடி : பெண்ணைத் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமன். இருவருக்குமிடையே மனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஸ்ரீமன், அஞ்சலியின் மாமியார் அமுதாவை தாக்கினார். காயமடைந்த அமுதா குள்ளஞ்சாவடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீமன் மீது, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை