கவுன்சிலர் மகனிடம் போலீசார் விசாரணை நெல்லிக்குப்பம் ஸ்டேஷன் முற்றுகை
நெல்லிக்குப்பம்: தனியார் சர்க்கரை ஆலையில் தகராறு செய்த கவுன்சிலரின் மகனை விசாரனைக்காக போலீசார் அழைத்து வந்ததால் போலீஸ் ஸ்டேஷனை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.ஒரு வாரத்துக்கு முன் வைடிபாக்கம் மற்றும் துலுக்கபாளையத்தை சேர்ந்தவர்களுக்கும் ஆலைக்கு உள்ளேயே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையறிந்த துலுக்கப்பாளையத்தை சேர்ந்த ம.தி.மு.க.,கவுன்சிலர் ராணியின் மகன் சங்கர் ஆலைக்கு விசாரிக்க சென்றுள்ளார்.அப்போது ஆலை அதிகாரிகளிடம் சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். இதுபற்றி ஆலையின் மனிதவள அதிகாரி பிரான்சிஸ் புகாரின் பேரில் நேற்று காலை நெல்லிக்குப்பம் போலீசார் சங்கரை விசாரனைக்கு அழைத்து வந்தனர்.இதையறிந்த பத்துக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் அப்பகுதி சேர்ந்த 50 பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சங்கரை விடுவிக்க வலியுறுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.