மேலும் செய்திகள்
கரையோரத்தில் ஆர்.டி.ஓ., ஆய்வு
30-Jun-2025
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வெள்ளாற்றங்கரையில் பெண் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார், வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றங்கரையில் நேற்று காலை பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பெண்ணாடம் போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண்ணாடம் போலீசார், கிராம உதவியாளர் மீனாட்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, அப்பகுதி மக்கள், சிலர் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் தெரியாத சிலர் எடுத்து சென்றதாகவும், சிலர் இங்கு எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறினர். மேலும், இதுதொடர்பாக கடலுார், அரியலூர் வெள்ளாற்றங்கரையோர கிராமங்களைச் சேர்ந்த யாரேனும் இறந்தனரா என்பது குறித்தும் வருவாய்த்துறை, போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30-Jun-2025