மேலும் செய்திகள்
காப்பு காட்டில் ஆண் உடல் மீட்பு
03-May-2025
கடலுார் : கடலுார் சிப்காட் தொழிற்சாலை கழிவுநீர் வாய்க்காலில் ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார் சிப்காட் டாக்ரோஸ் தொழிற்சாலை கழிவுநீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று கிடந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு அருகில் உள்ள முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பச்சையாங்குப்பத்தை சேர்ந்த கண்ணன் 45; என்பது தெரிந்தது. இம்மாதம் 3ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் கண்ணனை காணவில்லை என, அவரது மனைவி சித்ரா கடந்த 22ம் தேதி கடலுார் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, கண்ணனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
03-May-2025