கெமிக்கல் கடைகளில் போலீசார் சோதனை
கடலுார்: கடலுார் மாநகரில் கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் மெத்தனால் விற்கப்படுகிறதா என, போலீசார் சோதனை நடத்தினர்.கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கருணா, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தனஞ்ஜெயன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடலுார் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் செம்மண்டலம், உப்பலவாடி, கண்ணாரப்பேட்டை, கடலுார் முதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.மேலும் கடலுார் மாநகர மெடிக்கல், ஆய்வகங்கள், கெமிக்கல் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்ட குழுவினர் சட்டவிரோதமாக மெத்தனால் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்ததனர்.