உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர பாதுகாப்பு

கடலுார் : மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று, பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி கடலுார் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் வழிபாட்டு தளங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர். தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை