உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சங்கமம் கல்லுாரியில் பொங்கல் விழா

சங்கமம் கல்லுாரியில் பொங்கல் விழா

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காடம்புலியூர் சங்கமம் மகளிர் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.நிகழ்ச்சியில் கல்லுாரி பொருளாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினாா். கல்லூரி இயக்குனர் பொன்னையா , துணை செயலாளர் அமுதா சரவணன் முன்னிலை வகித்தனர்.லக்ஷ்மண நாராயணன்,சரவணன், ஆனந்தன் மற்றும் டாக்டர் சங்கீதா கலைநேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.பொல்கல் வைத்து வழிபட்டதை தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பரதநாட்டியம், கோலாட்டம், கும்மி, தப்பாட்டம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம் நிகழ்ச்சிகள் நடந்தது. பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் உறியடித்தல், கயிறு இழுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் தமிழ்த்துறை பேராசிரியை ராதிகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுகிர்த்தா, தமிழ்துறை தலைவர் சங்கரி, நுண்உயிரியல் துறைத் தலைவர் சுஜிதா, கணித துறை தலைவர் ரஞ்சனி, வணிகவியல் துறைத் தலைவர் இந்துமதி கலந்து கொண்டனர்.பேராசிரியை கோமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !