மேலும் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு கலெக்டர் துவக்கி வைப்பு
10-Jan-2025
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் செல்விஆனந்தன் முன்னிலை வகித்தார். தனி துணை கலெக்டர் தனலட்சுமி பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். ஆத்மா திட்டக்குழு வட்டார தலைவர் தங்க ஆனந்தன், ஸ்ரீமுஷ்ணம் வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வி, தொடக்க வேளாண கூட்டுறவு வங்கி செயலாளர் கணேசமூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், தி.மு.க. விவசாய அணி கிருஷ்ணமூர்த்தி, கலை இலக்கிய அணி வாசு. ராஜேந்திரன், வர்த்தக அணி முத்துராமலிங்கம், நகர செயலாளர் செல்வகுமார், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
10-Jan-2025