மேலும் செய்திகள்
நர்த்தன விநாயகர் அருள்பாலிப்பு
16-Jan-2025
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று காணும் பொங்கல் கொண்டாடப் பட்டது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு விநாயகர்,ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தனி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி உற்சவர்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கலச அபிஷேகம் நடந்தது. 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 10:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்து, சுவாமிகள் ஆலய உலாவாக வந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.இன்று 17 ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.
16-Jan-2025