மேலும் செய்திகள்
த.மா.கா., சிதம்பரம் நகர தலைவராக நாகராஜ் நியமனம்
13-Oct-2024
சிதம்பரம், : சிதம்பரம் குமரன் குளம், 81.40 லட்சத்திலும், 31 லட்சம் மதிப்பில் நடைபாதையுடன் பாலமான் குளம் மற்றும் பூங்கா, இந்தியா துாய்மை திட்டத்தின் கீழ், 34 லட்சத்தில், சிதம்பரம் பஸ் நிலையத்தில், நவீன கழிவறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமை தாங்கினார். பொறியாளர் சுரேஷ், துணை சேர்மன் முத்துக்குமரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்விஜயராகவன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், குளங்கள் மற்றும் கழிவறையை திறந்து வைத்தார். கவுன்சிலர்கள் ரமேஷ், அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், அசோகன், மணிகண்டன், தாரணி அசோக், சுதாகுமார், புகழேந்தி, லதா, கல்பனா சண்முகம், சுனிதா மாரியப்பன், சரவணன், பூங்கொடி, தி.மு.க., நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், இளைஞரணி அமைப்பாளர் அருள், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், ஒப்பந்ததாரர் ரஜினிகாந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.
13-Oct-2024