தரமற்ற சாலை பணி: பொதுமக்கள் புகார்
கடலூர், ; சி.என்.பாளையம் காலனி சுடுகாட்டிற்கு தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.நடுவீரப்ட்டு அடுத்த சி.என்.பாளையம் காலனி சுடுகாட்டிற்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுடுகாடு பாதை அமைக்கும் பணி துவங்கி, பாதியிலேயே நின்றது. அதையடுத்து, மீண்டும் புதியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. சாலை முறையாக போடப்படாததால், சாலையில் பல இடங்களில் புல் முளைத்துள்ளது. புல் முளைத்த தார் சாலையில் நேற்று காலை களைக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனால் மருந்து தெளித்தவர் தலைமறைவானார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் சாலையை ஆய்வு செய்தனர். அப்போது, ்சாலை தரமற்று அமைக்கப்பட்டது உறுதி செய்தனர்.புதியதாக போடப்பட்ட தார்சாலை கையால் பெயர்த்தாலே பெயர்ந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.