உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆதார் சேவை பயன்படுத்திக்கொள்ள அஞ்சல் துறை அழைப்பு
சிதம்பரம்: சிதம்பரம் தலைமை தபால் நிலையதில் பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை திறப்பு விழா நடந்தது. உலக தாய்ப்பால் தினத்தையொட்டி, நேற்று சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில், பாலுாட்டும் தாய்மார்களுக்கானஅறை திறப்பு விழா நடந்தது, விழாவிற்கு சிதம்பரம் போஸ்ட் மாஸ்டர் ரவி தலைமை தாங்கினார். உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் ஷர்மிலா முன்னிலை வகித்தார். மாவட்ட கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி பங்கேற்று பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குமரவடிவேலு மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி கூறுகையில், சிதம்பரத்தில் ஆதார் சேவை மையம் விரிவுபடுத்தப்பட்டதால், தினமும் நுாற்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் பாலுாட்டும் தாய்மார்கள் குழத்தையுடன் வரும்போது, குழந்தைகளுக்கு பாலுாட்ட மிகவும் சிரமப்பட்டனர். இதை அறிந்து, 60 ஆயிரம் நிதியில், பாலுாட்டும் அறை திறக்கபட்டுள்ளது. மேலும், தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மாவட்ட அளவில் 8 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி, ஆதார் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.