தபால் அனுப்பும் போராட்டம்
கடலுார்: கடலுாரில் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், ஊராக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆகியோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.கடலுாரில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர்கள் கருணாமூர்த்தி, கண்ணன், வேலவன், திருவேங்கடம் முன்னிலை வகித்தனர். மாநில பொறுப்பாளர்கள் சீதாராமன், ரங்கசாமி, சேகர், வேல்முருகன், ஜெய்சங்கர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில்இணைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.