உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனர் பீமரத சாந்தி விழா

 பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனர் பீமரத சாந்தி விழா

பண்ருட்டி: பண்ருட்டியில் பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனர் மாயகிருஷ்ணன் - ரத்தினாம்பாள் பீமரத சாந்தி விழா நடந்தது. பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ், ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் - ரத்தினாம்பாள் பீமரத சாந்தி விழா நேற்று லட்சுமிபதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை ரத்தனா பள்ளி இயக் குனர் தேவநாதன் - மஞ்சுளாதேவி, முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் - லட்சுமி, கீழக்குப்பம் முன்னாள் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் - மணிமலர், ரத்தனா பள்ளி முதல்வர் ரவி - ரம்யா, டாக்டர்கள் அருள்விக்னேஷ் - பிரதீபா, அஜித்குமார் - தேவதர்ஷினி வரவேற்றனர். விழாவில் முன்னாள் அமைச்சர் சம்பத், டாக்டர்கள் நந்தகோபால், கவுரிசங்கர், கலைநேசன், ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் ராஜ்மோகன், நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன், முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், பொருளாளர் செல்வமணி, ஜெயா கேஷ்யூஸ் ஜெயமூர்த்தி, முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க சங்கர் மணிகண்டன், மதன்சந்த், நரேஷ்சந்த், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், நடுக்குப்பம் முன்னாள் தலைவர் சக்திவேல், பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனர் மாயகிருஷ்ணன், எஸ்.வி.,ஜூவல்லரி வைரக்கண்ணு, அருள் மற்றும் குடும்பத்தினர் நிவேதா, குமரமணிகண்டன், வர்ஷனா, மதிபாலா, கீர்த்திமாறன், ரிஷிபாலா, ருத்ரவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி