மேலும் செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
06-Sep-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு மற்றும் சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், ச ி.என்.பாளையம் மலையாண்டவர் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை விநாயகர், நந்திக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் கோவில் உள் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
06-Sep-2025