உள்ளூர் செய்திகள்

பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு மேல், 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் சுவாமி மூலவருக்கு பாலபிேஷகம் நடந்தது. பின்னர், நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ