உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டு

கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டு

கடலுார்: கபடி போட்டியில் பல்கலை அணி சார்பில் பங்கேற்ற கடலுார் மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. கடலுார் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் கபடி போட்டியில் பயிற்சி பெறும் மாணவிகள் சுவேதா, சந்தியா, ஜெயப்பிரியா ஆகியோர் தட்சசீலா பல்கலை அணிக்காகவும், மாணவி ரஞ்சனி அண்ணாமலை பல்கலை அணிக்காகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாணவிகள் சென்னை சோழிங்கநல்லுார், விநாயகா மிஷன் பல்கலையில் நடந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடினர். பல்கலைக்கழக அணி சார்பில், தென்னிந்திய அள விலான போட்டியில் விளையாடிய மாணவிகள் சுவேதா, சந்தியா, ஜெயப்பிரியா, ரஞ்சனி ஆகியோருக்கு நடந்த பாராட்டு விழாவில், மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,ரகுபதி பங்கேற்று மாணவிகளுக்கு சால்வை அணவித்து, நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், விளையாட்டின் சிறப்புகளையும், நன்மைகளையும் எடுத்துரைத்தார். பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை