மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி
29-Aug-2024
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதல்வர் கோப்பை பீச் வாலிபால் போட்டி நடந்தது.கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.இதில், கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விஷ்ணு, கோபி ஆகியோர் முதல் பரிசு 3,000 ரூபாய் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த டாக்டர் நந்தினி ஆகியோர் பாராட்டினர்.பள்ளி முதல்வர் உதயகுமார் சாம், ஒருங்கிணைப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
29-Aug-2024