மேலும் செய்திகள்
75 ஆண்டுகளாக தொடரும் சமுதாய பணி
3 hour(s) ago
கடலுார்:நடுநிலையோடு செய்திகளைத் தருவதில் 'தினமலர்' முதன்மைப் பத்திரிகையாக உள்ளது என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்டடப் பொறியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு முன்னாள் மாநிலத் தலைவர் தாயுமானவன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: லட்சோப லட்சம் வாசகர்களை தன்னகத்தே கொண்டு, மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள 'தினமலர்' நாளிதழ் தற்போது பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மகிழ்ச்சி. நடுநிலையோடு செய்திகளைத் தருவதில் 'தினமலர்' முதன்மைப் பத்திரிகையாக உள்ளது. படித்தவர்கள் முதல் பாமரர் வரை அத்தனை பேரையும் ஈர்க்கும் வகையில் செய்திகளை சுவாரசியமாக வழங்குவது தினமலரின் தனிச்சிறப்பு. மக்களின் பேராதரவோடு தற்போது பவளவிழா கொண்டாடும் தினமலர், மென்மேலும் சிறப்புற்று, நுாற்றாண்டு விழா கொண்டாடி மேலும் பல நுாறாண்டுகளுக்கு நிலைத்து நிற்க மனமார்ந்த வாழ்த்துகள்.
3 hour(s) ago