தனியார் நிறுவன சூப்பர்வைசர் சாவு
கடலுார்: கடலுாரில் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தில் பணிபுரிந்த பீகார் மாநில ஊழியர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பீகார் மாநிலம், பத்தாஜி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் சர்மா,32. இவர் குஜராத்தைச் சேர்ந்த அனேரி கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தில் புரோெஜக்ட் மேனேஜராக பணிபுரிந்தார். இவரது மேற்பார்வையின் கீழ், காஸ் பைல் லைன் பதிக்கும் பணியில் கடலுார் அடுத்த காரைக்காடு பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அதில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்த பீகாரைச் சேர்ந்த ஜெனார்த்தன் பிரசாத்,53, என்பவர், கடந்த இரண்டு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். நேற்று காலை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.