குருஞான சம்மந்தர் பள்ளியில் சதுரங்க போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
சிதம்பரம் : சிதம்பரம் ஸ்ரீ குருஞான சம்மந்தர் மெட்ரிக் பள்ளியில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியின் 25ம் ஆண்டு விழவையொட்டி, சிதம்பரத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற செஸ் மற்றும் கேரம் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 15 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்றனர். விழாவிற்கு பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் சுவேதகுமார் தலைமை தாங்கினார். பொருளாளர் தர்பாரண்யன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிதம்பரம் ேஹாஸ்ட் அரிமா சங்கத் தலைவர் சுபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு வழங்கி பேசினார். செயலாளர் சூரியநாராயணன், அருண், கமல்சந்த், உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், செல்வி, பானுஸ்ரீ, ஆசிரியை ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் இராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.