மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வக்குமாரி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். இதில், காங்., நகர தலைவர் ரஞ்சித், கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், மாவட்ட செயலர் ராஜா, மாவட்ட மகிளா காங்., தலைவர் லாவண்யா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Jan-2025