விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கி, நேரு படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். விழாவில், தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர். மழலையர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. குழந்தைகள் தினம் குறித்து மாணவர்கள் கவிதை வாசித்தனர்.