மேலும் செய்திகள்
வயல்வெளி விழா
17-Mar-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகளுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் எவ்வாறு கொள்முதல் செய்வது குறித்து பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பச்சை பயறு, உளுந்து ஆகியவற்றிற்கான ஆதார விலை குறித்து ஒழுங்குமுறை விற்னை கூட இளநிலை உதவியாளர் அண்ணாமலை பயிற்சி அளித்தார். மாணவிகள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, கீர்த்தனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17-Mar-2025