உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தவில் பேராசிரியருக்கு கலைமாமணி விருது 

தவில் பேராசிரியருக்கு கலைமாமணி விருது 

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழக இசைத்துறை 'தவில்' பேராசிரியருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் தவில் பேராசிரியராக திருக்கடையூரை சேர்ந்த பாபு 2003ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் 'தவில்' கற்கும் பாடமுறைகள்' என்ற தலைப்பில், தவில் கற்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பாடுமுறைகள் வகுத்து 2019ம் ஆண்டு புத்தகம் வெளியிட்டார். தவிலுக்காக முதல் முறையாக, புத்தகம் வெளியிட்டவர் பாபு. கலைமாமணி விருதுக்கு, தமிழக அரசு பாபுவை தேர்வு செய்து, கடந்த 11ம் தேதி சென்னையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பாபுவிற்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, பாபுவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இசைத்துறை தலைவர் சுதர்சன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை