மேலும் செய்திகள்
உழவரை தேடி திட்டம் ஆலம்பூண்டியில் துவக்க விழா
30-May-2025
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டில் 'உழவரை தேடி' திட்டம் துவக்க விழா நடந்தது.விவசாயிகள் மேம்பாட்டிற்கான 'உழவரைத் தேடி' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனையொட்டி நடுவீரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமிகாந்தன் 'உழவரைத் தேடி' திட்டம் குறித்தும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் பயிர் காப்பீடு, பி.எம்.,கிசான் திட்டம் குறித்தும் பேசினர்.வேளாண்மை துணை இயக்குநர்பூங்கோதை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், கரும்பு ஆராய்ச்சி நிலைய மண்ணியல் துறை பேராசிரியர் பாபு, மண் பரிசோதனை செய்யும் முறைகள் குறித்தும் பேசினர்.விழாவில், விதைச்சான்று உதவி இயக்குநர் விஜயா, உதவி பொறியாளர் ரமேஷ், தோட்டக்கலை உதவி அலுவலர் பாபு, வேளாண்மை அலுவலர்கள் மாலினி, ஜெயஸ்ரீ, உதவி விதை அலுவலர் நாகரத்தினம், உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயகுமார்,சிவமணி,விக்ரம் வசந்த்,ராதை, பாலகுரு உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார வேளாண்மை அலுவலர் பொன்னிவளவன் நன்றி கூறினார்.
30-May-2025